இதற்கு காரணம் அந்தப்படத்தின் கதை தான். இலஞ்சம் மற்றும் ஊழல் செய்பவர்களை தேடித்தேடி கொல்லும் இந்தியன் தாத்தா தான் இந்த படத்தில் ஹைலைட்.
தற்போது கடந்த சிலமாதங்களாக தொடர்ந்து அரசியல் பேசிவருகின்றார் கமல். இந்நிலையில் தான் கமல்--சங்கர் கூட்டணி இணைந்து இந்தியன் பார்ட் 2 எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சங்கர் ரஜினியை வைத்து எடுத்துவரும் எந்திரன் 2.0 படப்பிடிப்பு முடிந்த கையோடு இந்தியன்-2 பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஒரு சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா ? வெளுத்து வாங்கும் கமல்
ஏற்கனவே சங்கர் அஜீத்தை வைத்து அஜீத்தின் 58வது படத்தை இயக்கப்போவதாக வேறு சில கதைகள் சுற்றிவருகின்றன.
பொறுத்திருந்து பார்ப்போம் சங்கர் யாருடன் இணையப்போகின்றாரென்று.




