ரஜினி, பிரபாஸ் எல்லோரையும் ஓரம் கட்டிய விஜய்- வசூல் சாதனைப் பட்டியல் இதோ !

0
5031
mersal
- Advertisement -

மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாக உலகமெங்கும் வசூலில் பட்டையயைக் கிழப்பிக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் வெளியான மெர்சல் அங்கு மட்டும் கிட்டத்தட்ட 11.1 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் இது 72 கோடியாகும்.
mersal
அமீர் கானின் டங்கல், ஷாருக்கானின் ரயீஸ் மற்றும் பாகுபலி ஆகிய பிரம்மாண்ட படங்கள் மட்டுமே வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. தற்போது தளபதியின் மெர்சலும் இந்த பட்டியளில் இணைந்துள்ளது.

-விளம்பரம்-

வெளிநாட்டு வசூல் நிலவரம் :
மேலும், எந்த ஒரு தமிழ் படமும் இதுவரை வெளிநாடுகளில் 10 மில்லியன் டாலர் வசூல் செய்ததில்லை. வெளிநாடுகளிலும் தளபதி படத்திற்கு உள்ள வரவேற்பை இது காட்டுகிறது.

குறந்த நாட்களில் 200 கோடி :

இது வரை தமிழ் திரையுளக படங்களில் தனது வாழ்நாள் முழுவதும் 280 கோடி ரூபாய்கள் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது எந்திரன். ஆனால், தற்போது வெரும் 14 நாட்களிலேயே 200 கோடி ரூபாய்கள் வசூல் செய்துள்ளது மெர்சல். எப்படியும் இன்னும் சில வாரங்களில் எந்திரன் சாதனையையும் முறியடித்துவிடும் மெர்சல். இதனால் வாயடைத்துள்ளது கோலிவுட் வட்டாரம்.

தமிழகத்தில் மட்டும் அதிவேக 100 கோடி:

அடுத்து தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த வார இறுதியுடன் தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு முன்பு எந்திரன் மற்றும் பாகுபலி-2 ஆகிய இரு படங்கள் மட்டுமே தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க: விஜய்யின் அடுத்த 62 படத்தின் நாயகிகள் மற்றும் இசையமைப்பாளர் இவங்களா !

அமெரிக்காவில் 10 கோடி வசூல் :
மெர்சல் படம் வெளிநாடுகளில் வசூலித்த 70 கோடியில் சுமார் 10 கோடி அமெரிக்காவில் இருந்து மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும், பல நாடுகளில் எந்திரன் வைத்த முந்தைய சாதனைய முறியடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிரது மெர்சல்,
mersal
சிங்கப்பூரில் நிலவரம் :
சிங்கப்பூரில் முதல் வாரத்திலேயே 1 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் வசூல் செய்துள்ளது மெர்சல் . மேலும், ஐக்கிய அரபு நாடுகளில் 8 கோடி ரூபாய்கள் வரை வசூல் செய்துள்ளது.

-விளம்பரம்-

UKவில் வசூல் நிலவரம் :
12 நாட்களில் யூ,கேவில் மட்டும் நாலரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. மேலும், முதல் நாளில் 81 லட்சம் ரூபாய் வசூல் செய்து முந்தய சாதனையான கபாலி வைத்திருந்த வசூலை தூசு தட்டியுள்ளது மெர்சல்.

இலங்கையில் மாஸ் :
முதல் 8 நாட்களில் இலங்கையில் மட்டும் 4 கோடி ரூபாய்கள் வசூல் செய்துள்ளது. பொதுவாக இலங்கையில் தல அஜித்திற்கு வரவேற்பு அதிகம்,. தற்போது மெர்சல் படத்திற்கு அங்குள்ள வரவேற்பு பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.

மற்ற நாடுகளான, நார்வே, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் வசூல் செய்யாத அளவிற்கு வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் பிற மாநிலங்களில் நிலவரம் :
தளபதியை தத்துப் பிளையாக கொண்டாடும் கேரளத்தில் இதுவரை 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது, இது ஏற்கனவே ஒரு தமிழ் படம் செய்த அதிக வசூலாகும். தமிழ் படத்தை வெளியிடக்கூடாது என போராட்டம் செய்த கர்நாடகாவில் மெர்சலுக்கு அமோக வவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை அங்கு 15 கோடி வசூல் செய்துள்ளது.
Mersal
அபிராமி ராமநாதன் சர்ச்சை வீடியோ:
கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வினியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறிய வீடியோ சமூக வலை தளத்தில் வைரலானது. இது படத்தை ஓடவைப்பதற்க்காக வசூல் நிலவரங்களை தியேட்டர் உரிமையாளர்கள் கிளப்பி விடுவது தான் எனக் கூறியிருந்தார். ஆனால், அந்த வீடியோ மெர்சல் படம் வெளியாவதற்கு முன்னரே பகிரப்பட்டதாகும். மேலும், மெர்சல் படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது என அவரே கூறினார். இதனால் மெர்சல் பட வசூல் சாதனைகள் உறுதியாகிறது. மேலும், அந்த வீடியோ மெர்சல் படத்தைப் பற்றியதல்ல எனவும் தெளிவாகிறது.

300 கோடியைத் தொடும் முதல் தமிழ் படம்:
இந்த வசூ வேகம் இப்படியே தொடரும் பட்சத்தில் படம் 50 நாட்களைத் தொடும் முன் 300 கோடியை வசூல் செய்துவிடும் என்பது நிதர்சனமே. அடப்படியாக இருக்கும் பட்சத்தில் 300 கோடியத் தொடும் முதல் தமிழ் நடிகராக உச்சம் தொடுவார் தளபதி விஜய்.

Advertisement