மெர்சல் படத்தில் எதற்காக அந்த காட்சிகள் நீக்கப்பட்டன – வருத்தத்துடன் எடிட்டர் !

0
2918
Mersal
- Advertisement -

தளபதியின் மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என படக்குழு அறிவித்திருந்தது. விஜய் ரசிகர்களளும் மெர்சலை கொண்டாட தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் கடந்த ஒரு வாரமாக எந்த படத்தையும் வெளியிடாமல் கேளிக்கை வரிக்கு எதிராக போராடி வருகிறது.
Mersalதீபாவளிக்கு பிரமாண்ட படங்கள் வெளிவருவது இயல்பு பாக்ஸ் ஆபிஸையும் அல்லும். இந்த வருடம் தீபத்திருநாளுக்கு மெர்சல் வெளிவருமா வராதா என்பதே கேள்வி குறியாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு மெர்சல் படத்தின் போஸ்டர்கள், பேனர்கள், கட்டவுட் என பல இடங்களில் மெர்சல் தனது பிரமோஷனை பிரமாண்டமானதாக மாற்றி கொண்டுள்ளது. இப்போது இன்டெர்நெட்டில் மெர்சலை பற்றிய செய்திகளின் தேடுதல் வேட்டையே அதிகம் .

இதையும் படிங்க: புறாவால் மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

- Advertisement -

Mersal-Vijayஇப்படி நாலாபுறமும் மெர்சல்தான். ஏற்கனவே இரண்டு டீசர்கள் வந்து சாதனை படைத்துவிட்டன. இதன் டிரைலர் வர வாய்ப்புகள் இல்லை.இந்நிலையில் தளபதி கண்டிப்பாக மெர்சல் தீபாவளிக்கு வெளிவரும் எனகூறியிருக்கிறாராம்.படம் பற்றி சில விஷயங்களை இப்படத்தின் எடிட்டர் ரூபன் நேரலையில் பகிர்ந்துள்ளார்.
Actor Vijayபடத்தில் சில காமெடி காட்சிகளை படத்தின் நேரம் கருதி நீக்கிவிட்டோம். எனக்கும் வருத்தமாக இருந்தது. கொஞ்சம் ஹுயூமர் போய்விட்டது. இதெல்லாம் படம் வெளிவந்த பிறகு டெலிட்டட் சீன்களாக வெளிவரும் என அவர் கூறினார்.