இந்த நிலையில் அனிதாவின் மரணத்தை கையிலெடுத்து கிருஷ்ணசாமி போன்ற ஒருசிலர் அரசியல் செய்து வருவது அவரது மரணத்தை விட கொடுமையான ஒன்று. அனிதா வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவிப்பதால் அரசியல் லாபம் பெறலாம் என்கிற அரசியல்வாதிகள் மத்தியில் எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி மனிதாபிமான நோக்கத்திற்காக மட்டுமே அவரது வீட்டிற்கு சென்று இரங்கல் தெரிவித்தவர் இளையதளபதி விஜய்.
அனிதாவின் தந்தை மற்றும் அண்ணனை நேரில் ஆறுதல் கூறியதோடு மட்டுமின்றி “எந்த நேரத்திலும் தன்னை அணுகி எந்தவித உதவியையும் கேட்கலாம்”என்று அனிதா குடும்பத்தினர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
அவரது அந்த ஒருவார்த்தை அனிதா குடும்பத்தினரை ஓரளவிற்கு ஆறுதல் படுத்தியிருக்கும் என்று நாமும் நம்பலாம்.




