ஹாலிவுட் நடிகர்களில் நாம் மறக்க முடியாத ஒரு நடிகர் என்றால் அர்னால்ட் தான். தனது வலிமையான உடல் அமைப்பை வைத்து சினிமாவினுள் நுழைந்தார் இவர் நடித்த கமாண்டோ,டெர்மினேட்டர் போன்ற பட வரிசைகளை நம்மால் மறக்கவே முடியாது.
ஒரு காலகட்டத்தில் பாடி பில்டிங் துறையில் இருந்த இவர் பின்னர் சினிமாவில் நடிக்கதுங்கிய போது இவரின் உடலுக்கு மட்டுமே பல ரசிகர்கள் கிடைத்தனர். தொடந்து வலிமையான ஆக்ஷன் ஹீரோ கதைகளிலேயே நடித்து வந்தார்.பின்னர் அமெரிக்கா களிபோர்னியா மாநிலத்தின் கவர்னராக பதிவே ஏற்றார்.
அர்னால்ட் தென் ஆப்ரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு அவர் சில விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசன வழங்கிக்கொண்டிருந்தார்.அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் முதுகில் உதைத்துள்ளார். உடனே பாதுகாவலர் அந்த நபரை தூக்கு செல்கிறார். இந்த விடியோவை அவரது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.