இந்த பக்கம் பேசியது நானு சரி, அப்போ அந்த பக்கம் பேசியது யாரு – விக்னேஷ் சிவனை வம்பிழுத்த மீரா மிதுன்.

0
3092
- Advertisement -

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது மீராமிதுன் விஷயம்தான். மீராமிதுன் குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் பிக் பாஸ் வீட்டில் கூட இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். குறிப்பாக சேரன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வந்த இவர், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான விஷயங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அதிலும் சமீபத்தில் இவர் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் இதனால் பல்வேறு பிரபலங்களும் இவருக்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் அதிலும் தானாசேர்ந்தகூட்டம் படத்தில் இவர் கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.ஆனால் இவரது காட்சிகளை சூர்யாவின் உத்தரவால் விக்னேஷ் சிவன் நீக்கியதாக குற்றம்சாட்டி இருந்தார். மேலும் சூர்யாவிற்கு நடிப்பே வராது என்றும் குறிப்பிட்டிருந்தார் மீராமிதுன். இந்த நிலையில் மீரா மிதுன் பேசிய ஆடியோ ஒன்றை இவரது பழைய மேனேஜர் ஒருவர் இணையத்தில் லீக் செய்து இருக்கிறார்

https://twitter.com/meera_mitun/status/1292531187731243008

இந்த நிலையில் ட்வீட் ஒன்றை செய்துள்ள மீரா மிதுன், சமீபத்தில் மீடியாவில் ஆடியோ ஒன்று வெளியானது. அதை பற்றி எனக்கு ஒன்றும் கவலை இல்லை, தமிழ் நாடு மீடியா அந்த பக்கம் பேசும் நபர் யார் என்று கண்டுபிடிப்பார்களா ? நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் விக்னேஷ் சிவன் என்று விக்னேஷ் சிவனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தையும் டேக் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement