தென்னிந்திய சினிமா திரை உலகில் 90 கால கட்டங்களில் “சாக்லேட் பாயாக” விளங்கியவர் நடிகர் மாதவன். தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியிலும் இவருக்கென்று தனித்துவமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர். தமிழில் மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மாதவன். சாக்லேட் பாய் என்ற அந்தஸ்தில் இருந்ததால் தொடர்ந்து ரொமான்டிக் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்தார். ஆனால், இவரை ஆக்ஷன் நாயகனாக ஓரளவிற்கு மாற்றியது தம்பி திரைப்படம் தான். கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை சீமான் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மணிரத்னம் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த படம் “அலைபாயுதே”. இந்த ரொமான்டிக் படமாக ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் நடிகர் மாதவன். சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் அவரது சினிமா வாழ்க்கைக்கு ஒரு நல்ல துவக்கமாக இருந்தது என்றும் கூறலாம். அதுமட்டும் இல்லாமல் பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் என்றும் சொல்வார்கள். மேலும், அவருடைய வசீகரமான பேச்சும், சிரிப்பும் தான் அவருடைய நடிப்புக்கு கூடுதல் பலமாக அமைந்தது இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ” இறுதிச்சுற்று, விக்ரம் வேதா” போன்ற படங்களில் நடிகர் மாதவன் மாஸ் காட்டி உள்ளார்.
இந்நிலையில் ஜி தமிழில் நடந்த பேட்டியில் நடிகர் மாதவன் அவர்கள் அலைபாயுதே படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, அலைபாயுதே படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சி எல்லாம் சூப்பர். அலைபாயுதே படத்தின் போது ஷாலினி–அஜித் காதலித்து வந்தார்கள். அந்த படத்துக்கு முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அப்ப ரொமான்ஸ் காட்சி எடுக்கும் போது ஷாலினி உனக்கு பதில் அஜித் இருந்து இருந்தா சூப்பரா இருந்திருக்கும் என்று சொன்னாங்க.
நான் உடனே உனக்கு பதில் என் மனைவி இருந்தா நல்லா இருந்திருக்கும் என்று மாத்தி மாத்தி நாங்கள் சொல்லி கொள்வோம். இருந்தாலும் நான் எதிர்பார்த்த மாதிரி படத்தினுடைய ரொமான்ஸ் காட்சிகள் எல்லாம் நல்லா வந்திருந்தது. அந்த படத்திற்கு பிறகு தான் எனக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறினார். தற்போது இவர் பேசிய வீடியோ இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்.
தற்போது “ராக்கெட்ரி நம்பியின் விளைவு” என்ற ஒரு புது படத்தில் நடிக்க உள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும், விஞ்ஞானி நம்பி கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை நடிகர் மாதவன் அவர்களே இயக்கி தயாரிக்கப்போகிறார் என்று ஒரு பக்கம் பேசுகிறார்கள். இந்த படத்தில் மாதவன் அவர்கள் 75 வயது முதியவராக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் அவர்களை ஒப்பந்தம் செய்து உள்ளார்கள். இந்த படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் உருவாக போவதாகவும் தகவல் வந்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பல எதிர்பார்ப்புகள் உள்ளது.