எனக்கு பொண்ணு பாத்துட்டு இருக்காங்க,இந்த நேரத்துல – சீரியல் நடிகையால் DJ பிளாக்கிற்கு வந்த சோதனை

0
1262
- Advertisement -

புதிய நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் ரசிகர்களை கவருவதில் விஜய் டிவி முதல் இடத்தில் உள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை சீரியல்கள், வார இறுதிகளில் ரியாலிட்டி ஷோக்கள் என டி ஆர் பியில் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான “ஹம் சொல்றியா ஹும் சொல்றியா” என்ற நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் ரோஜாஸ்ரீ. இதில் தொகுப்பாளராக இருப்பவர் தான் டிஜே பிளாக்.

-விளம்பரம்-

ரோஜா ஸ்ரீ :

சமீபாத்தில் தேஜாஸ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பான “ஹம் சொல்றியா ஹும் சொல்றியா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த போது மற்றவர்களுக்கு கோரஸ் பாடல் போடுவதை போல இவருக்கும் ரோஜா பாடல் போட்டிருந்தார் டிஜே பிளாக். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி ரோஜாஸ்ரீ ஒரே நாளில் பிரபலமானார். இந்த நிலையில் ரோஜா ஸ்ரீ பல தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்து தனக்கும் டிஜே பிளாக்கிற்கும் இடையிலான உறவை பற்றி பல விஷியங்களை கூறியிருந்தார். காலப்போக்கில் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்று சொல்லும் அளவிற்கு அந்த விஷயம் வைரலானது.

- Advertisement -

அது என்னோட வேலை :

இந்த நிலையில் “ஹம் சொல்றியா ஹும் சொல்றியா” தொகுப்பாளராக டிஜே பிளாக் தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் ரோஜாஸ்ரீ பற்றிய விஷயம் குறித்து தெளிவாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது `அதில் இரண்டு விஷியங்கள் நடந்தது ஓன்று என்னவென்றால் நல்ல பிரபலம் கிடைத்தது மற்றொன்று அது தவறாக உபயோக படுத்தி வீட்டனர் என்று தான் நான் நினைக்கிறன். என்னுடைய வேலை யார் புதிதாக வந்தாலும் அவர்களுக்கு பாடல்கள் போடுவதுதான், அதே போல தான் ரோஜாஸ்ரீக்கு அவருடைய பெயரில் பாடல் போட்டிருந்தேன்.

தவறான சித்தரிப்பு :

ஆனால் அந்த விஷயம் தவறாக சென்று விட்டது. ஒரு வகையில் நம்மால் அவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்கிறது என்று மகிச்சிதான் இருந்தாலும் இது வேறுமாதிரியான பிரச்சனையை உருவாக்கி விட்டது. ரோஜா ஸ்ரீ முதலில் பேட்டி கொடுக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அடுத்துவரும் பேட்டிகளில் “Thumbnail”களில் லவ், ரிலேஷன் ஷிப், பிரேக் அப் என முற்றிலும் வேறு மாதிரியாக மாற்றி விட்டனர்.

-விளம்பரம்-

எனக்கு பெண் பார்க்கின்றனர் :

உண்மையை சொல்ல போனால் ரோஜா ஸ்ரீ எனக்கு ஒரு ஹாய் கூட சொல்லியது கிடையாது. ஆனால் ஒரு நேர்காணலில் அவர் என்னிடம் பேனில் பேசிய போது எனக்கு அது அப்போதே தவறாக தெரிந்தது. பின்னர் ரோஜா ஸ்ரீ அடுத்து கொடுத்த பேட்டிகளில் மிகவும் மோசமாக இருந்தது. அதே சமயம் எனக்கு வீட்டில் பொண்ணு பார்த்து கொண்டிருக்கும் போது இந்த விஷயம் என்னுடைய குடும்பத்தில் சில மனஸ்தாபங்களை ஏற்படுத்தியது. நான் ஏதோ செய்ய நினைத்து வேறு ஏதோ நடந்து விட்டது.

எனக்கு அவருக்கும் சம்மந்தம் இல்லை :

இருந்தாலும் நம்மால் ஒருவருக்கு நல்லது நடக்கிறது என்பது மகிச்சிதான். இருந்தாலும் இதனை எல்லோரும் வெறும் கன்டென்டாக மட்டும் பார்த்தால் நல்லது, ஆனால் அதற்கு மாறாக தவறாக சித்தரித்து போடுவது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். நான் நிகழ்ச்சியில் உள்ள பலருக்கு இவருக்கு பாடல் போட்டது போல போட்டிருக்கிறேன் ஆனால் இந்த விஷயம் இப்படி வெடிக்கும் என எதிர்பார்க்க வில்லை.

ஒரு ஹாய் கூட சொல்லியது கிடையாது :

ரோஜா ஸ்ரீ முதலில் கொடுத்த பேட்டிகளில் என்ன நடந்தது என்பதை தெளிவாக சொல்லியிருந்தார். ஆனால் போக போக அவரும் லவ் ட்ராக்கில் இருப்பது போலவே பேசியிருந்தார்கள். அது மனக்கஷ்டமாக இருந்தது. நான் அந்த பேட்டியில் பேசியது தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஒரு ஹாய் கூட சொல்லியது கிடையாது. ஆனால் இந்த விஷயம் தொடர்பாக பல பேர் றன்னை தொடர்பு கொண்டு கேட்டனர் அது எனக்கு வருத்தமான இருந்தது. அதோடு நான் நிகழ்ச்சிக்காகத்தான் அப்படி செய்தேனே தவிர எனக்கும் ரோஜா ஸ்ரீக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று தெளிவாக ககூறியிருந்தார் டிஜே பிளாக்.

Advertisement