எல்லோரும் எதிர் பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதி.! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!

0
764
- Advertisement -

விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் தான். இன்னும் சில மாதங்களில் ஒளிபரப்பாக போகும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற போகும் போட்டியாளர்கள் யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஹிந்தியில் 12 சீசன்களை கடந்த நிகழ்ச்சியில் தமிழில் இரண்டு சீசன்களை மட்டுமே கடந்துள்ளது. இந்த இரண்டு சீசன்களில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது .இந்த நிலையில் மூன்றாவது சீசனும் விஜய் தொலைக்காட்சியில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.

- Advertisement -

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமோ விடீயோக்களை விஜய் டிவி வெளியிட்டது. மேலும், கடந்த சில நாட்களாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பற்றிய பெயர்களும் வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஓகே ஓகே பட புகழ் ஜாங்கிரி மதுமிதா மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கும் தேதி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் சீசன் 25 ஜூன் 2017லும், இரண்டாவது சீசன் 17 ஜூன் 2018லும் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement