கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை, வட சென்னை படநடிகரின் மகன் கைது.

0
997
- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘கிழக்கு சீமையிலே படத்தில்’ வில்லன் ரோலில் நடித்து புகழ் பெற்ற நடிகர் சூர்யகாந்த் இவர் சுமார் 50ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் தூறல் நின்னு போச்சு, வசந்த காலம் விக்ரமின் அருள் படம் போன்றவையாகும். வில்லன் மற்றும் குணசித்திர கேரட்டரில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வட சென்னை படத்தில் கூட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்ஷின் தந்தை கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

இவருக்கு விஜய் ஹரீஸ் (25) என்ற மகனும் இருக்கிறார். இவர் தற்போது ‘நாங்களும் நல்லவங்கதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தேனாம்பேட்டையை சேர்ந்த குறிப்பிட்ட கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவர், நடிகர் சூர்யபிரகாஷின் மகன் விஜய் ஹரீஸ் என்னை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார் என்று காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

 புது வண்ணார பேட்டையை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர் மகளிர் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாராம். அவருக்கு தோழிகள் மூலம் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சூர்யா பிரகாஷின் மகன் விஜய் ஹரிஸ் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் விஜய் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி அழைத்து வந்து சென்னை விருகம்பாக்கம் அறை ஒன்றில் ரூம் எடுத்துள்ளளார்.

-விளம்பரம்-
actor-suryakanth-s-son-arrested-for-drugging-a-college-student-and-rape-case

அங்கு அந்த மாணவிக்கு குளிர்பானம் ஒன்றில் மயக்க மருத்து கலந்துகொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விஜய் அப்பெண்ணை செல்போனில் படம் பிடித்து கூப்பிடும் போது வரவேண்டும் இல்லையெனில் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதனால் அவர் மீது அந்த மாணவி சென்னை திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் ஆய்வாளர் சுகுனா என்பவர் விஜய் ஹரீஸை கைது செய்துள்ளனர்.

Advertisement