லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் இவருக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.
ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அதோடு மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிம்புவின் உடல் எடை மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்களே சிம்பு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
இதனால் லண்டன் சென்று உடல் எடை குறைப்பதற்காக உடல் பயிற்சிகளை அங்கேயே தங்கி மேற்கொண்டு வந்தார் சிம்பு. சமீபத்தில் நடைபெற்ற தனது சகோதரர் திருமணத்தில் சிம்புவை கண்ட பலருக்கும் ஆச்சர்யம் தான், காரணம் முன்பை விட படு ஸ்லிம்மாக மாறியுள்ளார் சிம்பு.
இதுகுறித்து சிம்புவின் மேனேஜர் கூறுகையில், சிம்புவின் இந்த மாற்றத்தை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வெறும் 37 நாட்களில் அவர் 13 கிலோ எடை குறைத்துள்ளார். அதுவும் எந்த ஒரு மருந்தையும் சிகிச்சையும் பயன்படுத்தாமல் அவருடைய கடின உழைப்பின் மூலம் தனது உடலைகுறைத்தார்’ என்று கூறியுள்ளார்