சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிக்கும் சிம்பு.! ரசிகர்கள் குஷி.!

0
334
Simbu

‘எனக்கு பட வாய்ப்புகளே இல்லை செலவுக்குக்கூட அம்மாவிடம் தான் பணம் வாங்கி வருகிறேன்’ என்று புலம்பிய சிம்பு தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். பட வாய்ப்புகள் இல்லாமல் என்று சிம்புவிற்கு மணிரத்தினம் செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

thotti jaya

அந்த படத்திற்கு பின்னர் நடிகர் சிம்பு மாநாடு, கவுதம் கார்த்தியுடன் ஒரு படம் கௌதம் மேனனுடன் ஒரு படம் என்று அடுத்தடுத்து படத்தில் வரிசையாக கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கடைந்த தொட்டி ஜெயா படத்தின் இரண்டாம் பாகத்திலும் சிம்பு நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘தொட்டி ஜெயா’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வி.இஸட்.துரை இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக கோபிகா நடித்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஒரு பாடலுக்கு மட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.

பஞ்ச் வசனம் பேசி நடித்த சிம்புவை விட இந்த படத்தில் அமைதியான சிம்புவாக நடித்த சிம்புவை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்திருந்தது. கேங்க்ஸ்டர் த்ரில்லர் படமான இதன் இரண்டாம் பாகம், சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு உருவாக இருக்கிறது. இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பகட்ட வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் v.z.துரை.