செம்பருத்தி சீரியல் இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்த நடிகைகள். இப்படி பண்ணலாமா ?

0
40420
sembaruthi

வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் அதிகமாக ஒளிபரப்புவது சீரியல்கள் மட்டும் தான். தினமும் பல லட்சம் பேர் இந்த சீரியலில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியல் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காலை முதல் இரவு வரை தொலைக்காட்சிகளில் அதிகமாக ஒளிபரப்புவது சீரியல் மட்டும் தான். இதனால் இந்த தொடரில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்று சொல்லலாம்.

TTN

- Advertisement -

திரைப்படங்களை போலவே டிவி சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் இரவு பகலாக அயராமல் உழைத்து வருகின்றனர். தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் என்றால் அது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று.

இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் தழுவல். இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. இந்நிலையில் செம்பருத்தி சீரியல் இயக்குனர் நீராவி பாண்டியன் மீது துணை நடிகைகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

-விளம்பரம்-

தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின் போது துணை நடிகைகள் சரியாக நடிக்கவில்லை என்ற காரணத்திற்காக இயக்குனர் நீராவி பாண்டியன் அவர்கள் நடிகைகளை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நடிகைகள் நேற்று திருவேற்காடு காவல் நிலையத்தில் இயக்குனர் நீராவி பாண்டியன் மீது புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் அவர்கள் இயக்குனர் நீராவி பாண்டியன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தார்கள். இதனையடுத்து போலீசார் இயக்குனர் நீராவி பாண்டியனை விசாரித்து உள்ளார்கள். அப்போது தான் துணை நடிகைகளிடம் இயக்குனர் நீராவி பாண்டியன் மன்னிப்பு கேட்டுள்ளார். பின் துணை நடிகைகளுக்கும், இயக்குனரும் இடையே சமாதானம் பேசப்பட்டது. பின் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்தது.

Advertisement