தனுஷ் பட நடிகை எடுத்த முடிவு – குவியும் பாராட்டுக்கள்

0
308
- Advertisement -

கோலிவுட்டில் தொடங்கி ஹாலிவுட் வரை பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது நடிகர் தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கி இருக்கிறது. மேலும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் மற்றும் 7 ஸ்சகிரீன்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தமிழ் நாடு முழுவதும் வெளியிடுகிறது.

-விளம்பரம்-

இப்படத்தில் தனுஷ் பள்ளி ஆசிரியராக நடிக்க இருக்கிறார், இவரோடு சம்யுக்தா மேனன், சாய்குமார், சமுத்திரக்கனி, பரணி, கென் கருணாஸ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர், மேலும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் கடந்த வருடம் இப்படத்தின் டீசர் வெளியான நிலையில் வரும் 17 ஆம் தேதி பிப்ரவரி மாதம் பகாசுரன் என்ற படத்துடன் ஒன்றாக வெளியாக இருக்கிறது.

- Advertisement -

சம்யுக்தா மேனன் :

இந்நிலையில் தான் வாதி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக இப்படத்தின் நாயகி சம்யுக்தா மேனன் சென்னை வந்திருந்தார். இவர் தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னர் வெளியான களரி என்ற படத்திலும் ஜூலைக் காற்று என்ற படத்தில் துணை நாயகியாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தற்போது தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தில் கதாநாயகியாக களமிறங்கி இருக்கிறார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை :

இப்படி பட்ட நிலையில் தான் வாத்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார் சம்யுக்தா மேனன். இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நான் பாலக்காட்டு பொண்ணு தான் தமிழ் எனக்கு சரளமாக வரும். ஆனால தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சரியாக கிடைக்கவில்லை. இருந்தபோதும் அந்த வாய்ப்பு தனுஷ் நடித்த படத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நான் பள்ளி ஆசிரியராக நடித்திருக்கிறேன்.

-விளம்பரம்-

சினிமா வந்த காரணம் :

நான் பனிரெண்டாம் வகுப்பு வரையில் தான் படித்திருக்கிறேன், அதற்கு பிறகு நடிக்க வந்துவிட்டேன். எல்லோரும் படிக்க வேண்டும் ஆனால் இது மட்டும் தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. எனக்கு நடிப்பு பிடித்து விட்டது எனவே நான் சினிமா துறைக்கு வைத்துவிட்டேன் என்று கூறினார்.

ஜாதி எனக்கு பிடிக்காது

மேலும் கூறுகையில் அவர் “என்னுடைய பெயர் சம்யுக்தா தான் ஆனால் மேனன் என்பது என்னுடைய ஜாதியின் பெயர். நான் எப்போதுமே ஜாதியை விரும்புவதில்லை. மலையாள சினிமாவில் பல பேர் சம்யுக்தா என்று பெயர் வைத்திருப்பதினால் செய்து ஊடங்கங்கள் என்னை மட்டும் சுட்டி காட்ட மேனன் என்று கூறுகின்றனர். எனவே தயவு செய்து அந்த மேனன் என்பதை நீக்கி விடுங்கள் எனக்கு ஜாதி பிடிக்காது. என்னை பெயரை மட்டுமே சொல்லி அழைத்தால் போதும் என்று அந்த பேட்டியில் கூறினார் வாத்தி பட நாயகி சம்யுக்தா.

Advertisement