நடிகர் பார்த்திபன் மீது வேலைக்காரர் கொலை முயற்சி புகார்.! பார்த்திபன் நக்கலை பாருங்க.!

0
629
Parthiban
- Advertisement -

பிரபல நடிகர் பார்த்திபன் மீது பார்த்திபன் வீட்டில் உதவியாளராக பணியாற்றி வந்த நபர் ஒருவர் சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக ஜெயங்கொண்டான் எனபவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
நகைகள் காணாமல் போனதால் என்னை தாக்கினார் - பார்த்திபன் மீது போலீசில் புகார்!


பார்த்திபன் வீட்டில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்த ஜெயங்கொண்டான், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நடிகர் பார்த்திபன் மீது புகார் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் நகைகள் கொள்ளை போனதை அடுத்து உதவியாளராக பணியாற்றி வந்த ஜெயங்கொண்டான் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்க : டவலை சுற்றிக்கொன்டு பியா பாஜ்பாய் கொடுத்த போஸ்.! சொக்கிப்போன ரசிகர்கள்.! 

- Advertisement -

இதற்கான காரணம் குறித்து கேட்க சென்றபோது பார்த்திபன் தன்னை தாக்கியதாக ஜெயங்கொண்டான் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நடிகர் பார்த்திபனிடம் கேட்ட பொழுது தன் வீட்டில் நகை திருடு போன விவகாரத்தில் தனது உதவியாளர் ஜெயங்கொண்டான் தொடர்பு இருப்பது தெரிந்ததால், இது போன்று பொய்யான புகாரை அளிப்பதாக நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.

அதே போல இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன்,
நகைச்சுவை உணர்வுக்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement