படு மாடர்னாக மாறிய தமிழ் பொண்ணு பிக் பாஸ் ரித்திகா.! பாத்தா நம்பமாடீங்க.!

0
1501
Rithvika

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரித்விகா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், அந்த சீசனில் முதல் இடத்தையும் பிடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பக்கா தமிழ் பெண்ணாக இருந்த இவர் தற்போது படு மாடர்ன் ஆகியுள்ளார்.

ஆயில் மேக்அப் கொஞ்சம் அதிகமா இருக்கோ?

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டபட்டது.

சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார்.

ரித்விகாவின் கியூட் புகைப்படம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை தான் ஒரு தமிழ் பெண் என்று அடிக்கடி தன்னை அடையாள படுத்திக்கொண்டே இருந்தார் ரித்விகா. சொல்லப்போனால் அந்த அடையாளம் தான் இவருக்கு வெற்றியை ஏற்படுத்தி தந்தது. ஆனால், சமீப காலமாக மாடர்ன் உடைகளில் அசத்தி வருகிறார்.