பிக் பாஸில் கமல் இவ்வளவு வேலை பண்ணியிருக்காராம்.! பிக் பாஸ் இயக்குனர் சொன்ன தகவல்.!

0
947
kamal

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, தமிழில் `வல்லமை தாராயோ’, `மூணே மூணு வார்த்தை’ ஆகிய படங்களை இயக்கியவர் மதுமிதா. இவரது இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் `KD என்கிற கருப்புதுரை’ படம் லண்டன் வேர்ல்ட் ப்ரீமியர் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.மேலும் இவர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனரும் ஆவார்.

``பிக் பாஸ் ஸ்கிரிப்ட்ல இல்லாம கமல் பேசுனதுலாம்...?’’ - இயக்குநர் மதுமிதா

இத்தனை காலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இயக்குனர் ஒரு பெண் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மதுமிதா பேசுகையில், எல்லா இயக்குநர்களுக்கும் ரஜினி சாரையும் கமல் சாரையும் இயக்கிடணும்னு ஆசை இருக்கும். அதுல எனக்குக் கமல் சாரை இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டதுமே ஓகே சொல்லிட்டேன். காரணம், கமல் சார்தான். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை சில எபிசோடுகள் பார்த்திருக்கேனே தவிர, அதைப் பத்தி அவ்வளவா தெரியாது.

- Advertisement -

முதல் ரெண்டு எபிசோடு அந்த மொழியில என்ன பண்ணியிருக்காங்களோ, அதைப் பார்த்துப் பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். ஆனா, அது நம்ம மக்கள்கிட்ட வொர்க் அவுட் ஆகலை. அப்புறம் நம்ம மக்களுக்கு எது பிடிக்கும்னு ஆலோசனை பண்ணி நாங்களே நிகழ்ச்சியை வடிவமைச்சோம். பிறகுதான் ஷோ ஹிட் ஆனது.

ஒவ்வொரு டிஸ்கஷன்லேயும் கமல் சாருடைய இன்புட்ஸ் நிறைய இருக்கும். இத்தனை வருடமா சினிமாவுல இருந்தும் அவருக்கு சினிமா மீதான காதல் கொஞ்சம்கூட குறையலை. எதையுமே அசால்டா டீல் பண்ண மாட்டார். சின்னச் சின்ன விஷயங்களையும் ரசிச்சுப் பண்றார். கமல் சாரை இயக்கியது என் வாழ்நாள்ல மறக்க முடியாத தருணங்கள்.

-விளம்பரம்-
Advertisement