பொது மேடையில் இளையராஜாவை பங்கமாக கலாய்த்த எஸ் கே பட இசையமைப்பாளர்.!

0
768
Ilayaraja speech

சமீபத்தில் இளையராஜாவின் நிகழ்ச்சி ஒன்றில் தண்ணீர் கொடுக்க வந்த பாதுகாவலர் ஒருவரை இளையராஜா கடுமையாக திட்டியதால் அந்த நபர் மேடையிலேயே இளையராஜாவின் காலில் விழுந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில் இளம் இசையமைப்பாளரான சபீர், இளையராஜா குறித்து கிண்டலாக பதில் அளித்துள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில், பிளாக் ஷீப் குழுவினர் இணைந்து உருவாகியுள்ள ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பிரபல தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னை பலபேர் முதுகில் குத்தியதாகவும் அல்லது அதனைக் கடந்து தான் வந்துள்ளதாகவும் மிகவும் நெகிழ்ச்சியாக பேசியிருந்தார் இதைத் தொடர்ந்து பேசிய இந்த படத்தின் இசையமைப்பாளர் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ‘இந்த படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்தியுள்ளீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர் ‘ஆண்மை இல்லாதவன் என்று சொல்லிவிடுவார்களே’ என்று கூற அரங்கமே அதிர்ந்தது, பின் ஆம், நான் இரண்டு இளையராஜா பாடல்களை பயன்படுத்தியுள்ளேன்.

-விளம்பரம்-
Advertisement