மறைமுகமாக நடிகர் விஜய் செய்த உதவி..! போட்டுடைத்த பிரபல தொகுப்பாளர்

0
1379
- Advertisement -

நடிகர் விஜய் ஒரு உன்னத நடிகர் என்பதை தண்டி ஒரு நல்ல மனிதராகவும் விளங்கி வருகிறார். நடிகர் விஜய் அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அது போக சமீப காலமாக பல உதவிகளை யாருக்கும் தெரியாமல் செய்திருக்கிறார் நடிகர் விஜய்.

-விளம்பரம்-

senthilnathan

- Advertisement -

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர்சில் பங்குபெற்ற செந்தில்நாதன் என்பவருக்கு நடிகர் விஜய் யாருக்கும் சொல்ல கூடாது என்று கூறி ஒரு பரிசினை வழங்கியுள்ளதாக பிரபல தொகுப்பாளர் மா.கா.பா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மா.கா.பா, நான் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த போது விஜய் சாரை சந்தித்துள்ளேன். அவர் எப்போதும் அமைதியாக தான் இருப்பார், ஒரு முறை சூப்பர் சிங்கர் ஜூனியர்சில் பங்குபெற்ற பார்வையில்லாத செந்தில் நாதனை நிகழ்ச்சியில் பார்த்துள்ளார் நடிகர் விஜய்.

-விளம்பரம்-

ma ka pa

பின்னர் ஒருமுறை செந்தில் நாதனை நேரில் அழைத்திருந்தார் நடிகர் விஜய். அப்போது நானும் உடன் போய் இருந்தேன். விஜய் சார் செந்திலை சந்தித்ததும் அவனுக்கு பணமும், ஒரு ஐபேடயும் வழங்கிவிட்டு இதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று விஜய் கூறியதாக மா கா பா தெரிவித்துள்ளார்.

Advertisement