தற்போது உள்ள நாகரீக உலகத்தில் ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்கள் மிகவும் குறைவு தான். பெருபாலும் நாம் ஸ்மாட் போனை நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைத்தளத்திற்காகத் தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். குறிப்பாக பேஸ்புக் பயன்படுத்தாத நபர்கள் மிகவும் குறைவே.
ஆனால், நாம் பயன்படுத்தும் பேஸ்புக்கில் நமக்கே தெரியாமல் நமது தகவல்கள் திருடப்படுகிறது என்பது தெரியுமா ? கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
பேஸ்புக்கில் இருந்து 6.8 மில்லியனுக்கும் அதிகமான புகைப்படங்கள் திருடப்பட்டு இணையத்தில் லீக் ஆனதாக தகவல்கள் வெளியாகின. இதுவெல்லாம் வதந்தி என எதிர்பார்த்த நிலையில், ஆமாம் உண்மைதான். லீக் ஆன புகைப்படங்களை அழிக்க முயற்சிகள் செய்கிறோம் என கூலாக பதிலளித்து வழக்கம் போல் மன்னிப்பு கோரியது பேஸ்புக்.
எப்படி புகைப்படங்கள் லீக் ஆனது என்று கேள்விக்கு பேஸ்புக் கைகாட்டியது மூன்றாம் தர செயலிகளைத்தான். நீங்கள் பேஸ்புக் பக்கத்தை ஸ்குரோல் செய்து கொண்ட போகும் பொழுது, உங்களுக்கு இதுவெல்லாம் நடக்கும். அறிய இங்கே க்ளிக் செய்யவும் என்று வருமே கவனித்து இருக்கிறீர்களா? நீங்கள் ஆணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள்? ராமாயணத்தில் நீங்கள் யார்? அஜித்தின் எந்த கேரக்டர் உங்களுக்கு செட் ஆகும்?
இப்படி எவ்வளவோ ஆர்வமான கேள்விகளுடன் நம்மை கிளிக் செய்ய வைப்பார்கள். அது உள்ளே சென்று 100 சதவீதம் ஓடி நின்று உங்களுக்கு ஒரு ரிசல்ட்டை காட்டும். அதை ஆர்வமாக நீங்கள் ஷேர் செய்வீர்கள். உங்களைப்பார்த்து உங்கள் நண்பர் முயற்சி செய்வார். இது தான் அந்த மூன்றாம் தர செயலியின் வேலை. இதுபோன்ற செயலி மூலம் தான் உங்களது தகவல்கள் திருடப்படுகிறது. எனவே, இதுபோன்ற மூன்றாம் செயலிகளை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.