தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.
டிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வானம் கொட்டட்டும்’ என்ற படத்தில்நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இறுதியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில்நடித்திருந்தார் . இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டா ஹீரோவாக நடித்திருந்தார் .தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாகியுள்ளார்.
தற்போது இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஷூட்டிங்கின் போது ரோட்டோர கடையில் தோசை சுட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.