0
22
- Advertisement -

ஜமீன் கோட்டை நடிகர் கலைப்புலி ஜி. சேகரின் மறைவு குறித்து நடிகர் கிங் காங் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர் கலைப்புலி ஜி சேகரன். இவர் யார் என்ற படத்தை தயாரித்து நடித்து இருந்தார். ஊரை தெரிஞ்சுகிட்டேன் என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதை தொடர்ந்து இவர் காவல் பூனைகள், உளவாளி போன்ற படங்களை எல்லாம் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படங்களை இவர் இயக்கியது மட்டும் இல்லாமல் தயாரித்தும் இருந்தார். அதோடு இவர் படங்களில் நடித்துக் கொண்டும் வந்தார். மேலும், இவர் சினிமா பைனான்சியர், விநியோகஸ்தர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று பன்முகங்களைக் கொண்டிருந்தார். அதன் பிறகு இவர் கலைப்புலி எஸ் தாணு உடன் சேர்ந்து கலைப்புலி பிலிம்ஸின் பங்குதாரராக இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.

- Advertisement -

ஜி. சேகரன் மறைவு:

இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் ரசிகர்கள் என பலருமே அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். இந்நிலையில்
இவருடன் சேர்ந்து நடித்தவரும்,, நடிகருமான கிங்காங் அளித்த பேட்டியில், எனக்கு சொந்த ஊர் வந்தவாசி. சினிமா ஆசையில் நான் சென்னைக்கு கிளம்பி வந்து விட்டேன். கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை. சைதாப்பேட்டை என்று நினைக்கிறேன். அங்கு இறங்கி எங்க போய் யாரிடம் வாய்ப்புக்கு தேடனும் என்று கூட தெரியாமல் இருந்தேன். என் உருவத்தைப் பார்த்த மக்கள் கூட்டமாக என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போ ரவிராஜ் என்ற ஒரு பத்திரிகையாளர் என்னிடம் வந்து விசாரித்தார். சினிமா பற்றி அவரிடம் சொன்னதுமே அவர் கோவை தம்பி சார் அலுவலகத்தில் கொண்டு போய்விட்டார்.

கிங் காங் பேட்டி:

அதன் பின் தான் கலைப்புலி சேகரன் சார் ஆபீஸிற்கு அழைத்துப் போனார். அப்பதான் ஊரை தெரிஞ்சுகிட்டேன் படத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அந்த படத்தில் என்னை ஒரு பாடலுக்கு ஆடச் சொன்னார் சேகரன் சார். அந்த பாட்டு மூலம் தான் நான் தமிழ் சினிமாவிலேயே அறிமுகமானேன். அதிலிருந்து என்னை அவருக்கு ரொம்பவே பிடித்து போனது. கொஞ்ச நாள் அவருடைய ஆபீஸ்லியே தங்கி அனுமதி தந்தார். அதற்கு பிறகு எல்லா படங்களிலும் ஏதாவது ஒரு வேடம் கொடுத்து விடுவார்.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்பு:

என்னுடைய உண்மையான பெயர் சங்கர். கிங்காங் என்று அவர்தான் எனக்கு பெயரையும் வைத்தார்.
முரண் நகையில் இருக்கட்டுமே என்று அவர் அப்படி வைத்தார். கிங் காங் மல்யுத்தம் என்பவர் சினிமாவில் இருந்த ஒருத்தர் பெயர். எனக்கு தொடர்ந்து பட வாய்ப்பு வந்ததால் என் வாழ்க்கையிலும் அவர் மறக்க முடியாத ஒருவராக மாறிவிட்டார். அதனால் என்னுடைய கல்யாணத்தை அவர் தலைமையில் தான் நடத்த ஆசைப்பட்டு சொன்னேன்.

ஜி. சேகரன் பற்றி சொன்னது:

அவரும் வடபழனியில் வைத்து என் திருமணத்தை நடத்தி வைத்தார். கடைசியாக மூன்று மாதத்திற்கு முன்னாடியும் அவரிடம் பேசினேன். பார்த்து ரொம்ப நாள் ஆனது பார்க்க வரட்டுமா சார் என்று கேட்டேன் எப்ப வேணாலும் வா என்று சொன்னார். ஒருநாள் போகணும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்குள் இன்றைக்கு இப்படி ஒரு தகவல் வந்ததை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று கண்கலங்கி கூறினார்.

Advertisement