தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பகவதி பெருமாள். நாகர்கோவிலை சேர்ந்த இவர் எம்.ஐ.டி. இன்ஜீனியரிங் கிராஜுவேட் படித்துவிட்டு சினிமா ஆசை இருந்தாலும் படிப்பு முடிஞ்சதும் ஒரு சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.
பின்னர் கல்லூரி நண்பர் மூலமாக ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமாரின் நட்பு இவருக்கு கிடைத்துள்ளது. இயக்குனர் பிரேம் காலேஜ் ஸ்டூடன்ட்டாக இருந்த போதே `சினிமாவுக்கெல்லாம் வராத.. இது ரொம்ப கஷ்டமான ஃபீல்ட்’னு அட்வைஸ் பண்ணவாராம்.
அதன் பின்னர் தனது நண்பரான பிரேம் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தனது ரூமேட்டான பாலாஜி தரணீதரனிடம் கூறி அதன் பின்னர் உருவானது தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம்.
அந்த படத்திற்கு பின்னர் ‘ஒரு கண்ணியும் மூன்று காலாவணிகளும், பிச்சைக்காரன், இன்று நேற்று நாளை,ஜில் ஜங் ஜக்’போன்ற பல படஙக்ளில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படியே பாதி வாழ்க்கை நகர்ந்துவிட கடந்த 2017 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டுள்ளார் பகவதி பெருமாள்.