ஹைகோர்ட்டாவது…மை***து..! எச்.ராஜா சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்த நடிகர் சித்தார்த்.!

0
36
- Advertisement -

சமீபத்தில் புதுக்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மெய்யபுரம் என்ற ஊருக்குள் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல பொது மக்கள் முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தால் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் துறையினரும் நீதி மன்றத்தை பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனம் செய்தார்.

H.Raja

எச்.ராஜா போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திரைப்பட நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

- Advertisement -

உயர் நீதிமன்றம் குறித்து எச்.ராஜா தரக்குறைவாக பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், அது நான் பேசியது இல்லை நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என்று எச் ராஜா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உயர் நீதிமன்றம் குறித்தும் காவல் அதிகாரிகள் குறித்தும் அவதூறாக பேசிய எச் ராஜா குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமரசித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது என்னவெனில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தமிழக காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர்.ஆனால், உயர் நீதி மன்றத்தையும், காவல் துறையையும் கடுமையாக விமர்சித்த முட்டாள் எச் ராஜாவை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இந்த ஹிந்துவாத தீவிர வாதிக்கு கடுமையான சட்டம் பாய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement