மீண்டும் இது போன்ற புகைப்படங்களை வெளியிட தயார்..!நடிகை அக்ஷரா ஹாசன் அதிரடி…!

0
3
Aksharahasan
- Advertisement -

இரண்டு நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Aksarahasan

கமலின் இளைய மகளான அக்ஷரா ஹாசன் தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்திருக்கிறார். அது போக இந்தியில் தனுஷ் மற்றும் அமீதாபாட்சன் நடிப்பில் வெளியான ‘ஷமிதாப்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியாக செலஃபீ புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வைத்தளத்தில் வைரலாக பரவி வந்ததை கண்டு பலரும் ஷாக்கடைந்துள்ளார்.

சமீபத்தில் தனது அந்தரங்க புகைப்படங்கள் குறித்து நடிகை அக்ஷரா ஹாசன் விளக்கமளித்துள்ளார், அதில் இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement