ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்தது இதனால் தான்..? கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி

0
63
Amala-paul
- Advertisement -

தமிழில் கடந்த ஆண்டு வெளியான “மேயாதமான்” என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ரதன்குமார் இயக்கிவரும் “ஆடை” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால். மிகவும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என்பதால் இந்த படத்திற்காக மற்ற படங்களின் வாய்ப்பையும் தவிர்த்துள்ளார் அம்மணி.

Amala Paul

வீ கிரேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் 04 ஆம் தேதி வெளியாகி இருந்தது. அதில் நடிகை அமலா பால் ஒரு கிழிந்த ஆடையில் உடம்பில் ரத்த காயத்துடன் படு கவர்ச்சியான உடையில் அமர்ந்து கொண்டு இருப்பது போல அந்த போஸ்டர் அமைந்திருந்து. இதனை பார்த்த ரசிகர்கள் அமலா பால் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று விமர்சனம் செய்து வந்தனர்,

- Advertisement -

ஒரு சிலர் கவர்ச்சியில் நடிகை அமலா பால் இந்தி நடிகைகளேயே மிஞ்சி விட்டார் என்றும் அடுத்த சன்னி லியோன் இவர் தான் என்றும் கூறி விருகின்றனர். ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாத நடிகை அமலா பால் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் நான் ஏன் அந்த ஆடையில் நடித்துள்ளேன் என்று கிண்டலடித்து வருபவர்களுக்கு பதிலளித்துள்ளர்.

Actress Amala Paul

சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள நடிகை அமலா பால், ஒரு நடிகை ஆடை இல்லாமல் நடித்தால்..அந்த நடிகை பற்றி தப்பாக நினைக்க வேண்டாம், இது ஆபாசம் இல்லை, நான் இந்த படத்திற்காக எதற்காக இப்படி போஸ் கொடுத்துள்ளேன் என்று பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை பார்த்து விமர்சிப்பவர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டுவார்கள். அந்த ஆடையுடன் நான் ஏன் அப்படி நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும். தற்போது என்னை கிண்டல் செய்து வரும் அனைவருக்கும் அப்போது புரியும் என்றும், இந்த படம் எனது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ரதன்குமார் இயக்கிய அவரது முதல் படமானா “மேயாதமான் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரது இரண்டாவது படமான “ஆடை” படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று அமலா பால் முழுமையாக நம்பி வருகிறார்.

Advertisement