“ஆடை” படத்திற்காக படு கவர்ச்சியில் அமலாபால்.! வெளியான புகைப்படம்.!

0
512
Actress-Amala-Paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து நடிகை அமலா பால் தற்போது நடிகை நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது கே ஆர் வினோத் இயக்கத்தில் ‘அதோ என்று பறவை போல ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து “மேயாதமான்” என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ரதன்குமார் இயக்கிவரும் “ஆடை” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால். மிகவும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என்பதால் இந்த படத்திற்காக மற்ற படங்களின் வாய்ப்பையும் தவிர்த்துள்ளார் அம்மணி.

- Advertisement -

வீ கிரேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(செப்டம்பர் 04) வெளியாகி இருந்தது. அதில் நடிகை அமலா பால் ஒரு கிழிந்த ஆடையில் உடம்பில் ரத்த காயத்துடன் அமர்ந்து கொண்டு அழுது கொண்டு இருக்கிறார். இந்த போஸ்ட்டரை வைத்து பார்க்கும் போது இந்த படம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்த கதைக்களம் கொண்ட படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Aadai

இயக்குனர் ரதன்குமார் இயக்கிய அவரது முதல் படமானா “மேயாதமான் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரது இரண்டாவது படமான “ஆடை” படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement