கவர்ச்சியில் நீங்கதான் அடுத்த சன்னிலியோன்..! புகைப்படத்தால் அமலாபாலை கிண்டல் செய்த ரசிகர்கள்!

0
246

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து நடிகை அமலா பால் தற்போது நடிகை நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது கே ஆர் வினோத் இயக்கத்தில் ‘அதோ என்று பறவை போல ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Amala Paul

இதை தொடர்ந்து “மேயாதமான்” என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ரதன்குமார் இயக்கிவரும் “ஆடை” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால். மிகவும் உணர்ச்சிகரமான கதாபாத்திரம் என்பதால் இந்த படத்திற்காக மற்ற படங்களின் வாய்ப்பையும் தவிர்த்துள்ளார் அம்மணி.

வீ கிரேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று(செப்டம்பர் 04) வெளியாகி இருந்தது. அதில் நடிகை அமலா பால் ஒரு கிழிந்த ஆடையில் உடம்பில் ரத்த காயத்துடன் படு கவர்ச்சியான உடையில் அமர்ந்து கொண்டு இருப்பது போல அந்த போஸ்டர் அமைந்திருந்து. இதனை பார்த்த ரசிகர்கள் அமலா பால் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று விமர்சனம் செய்து வந்தனர்,

SONY DSC

ஒரு சிலர் கவர்ச்சியில் நடிகை அமலா பால் இந்தி நடிகைகளேயே மிஞ்சி விட்டார் என்றும் அடுத்த சன்னி லியோன் இவர் தான் என்றும் கூறி விருகின்றனர். ஆனால், இதை எதையும் பொருட்படுத்தாத நடிகை அமலா பால் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் நான் ஏன் அந்த ஆடையில் நடித்துள்ளேன் என்று கிண்டலடித்து வருபவருக்கு படத்தை பார்த்துவிட்டு பின்னர் அதனை புரிந்து கொள்வார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.

இயக்குனர் ரதன்குமார் இயக்கிய அவரது முதல் படமானா “மேயாதமான் ” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவரது இரண்டாவது படமான  “ஆடை” படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கபடுகிறது