பிந்து மாதவியா இது..!மேக்கப் இல்லாம பாத்திருக்கிங்களா.?அதிர்ச்சி புகைப்படம் இதோ.!

0
143
Bindhu
- Advertisement -

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருப்படாத வாலிபர்’ சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும், இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்னவோ ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ படத்தில் தான்.

Bindu-Madhavi

அந்த படத்திற்கு பிறகு ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி என்ற விடயத்தை பயன்படுத்தியதே கிடையாது . கடைசியாக 2016 இல் இவர் நடிப்பில் வெளியான ‘ஜாக்சன் துறை’ படத்திற்கு பிறகு ஆல் விலாசமே இல்லாமல் போய்விட்டார்.

- Advertisement -

நடிகை பிந்து மாதவியின் உண்மையான குணம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போது தான் தெரிந்தது. எப்போதும் வெகுளித்தணம் பொருந்திய பிந்து மாதவி விளையாட்டு குணம் கொண்டவர் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில விளையாட்டுத்தனமான செயல்களில் மக்கள் அறிந்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்னர் கூட ஒரு முருங்கை மரத்தின் மீது ஏறி எடுத்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மேக் அப் எதுவும் போடாமல் மிகவும் சோர்வுடன் காணப்படும் நடிகை பிந்து மாதவி ‘நேற்று இரவு தூக்கம் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், நடிகை பிந்து மாதவி எந்தவித ட்விட்டர் கணக்கையும் வைத்துதிருக்கவில்லை என்று ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார். எனவே, இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அவரது பெயரில் ட்விட்டர் கணக்கை தொடர்ந்து நடிகை பிந்து மாதவியின் நடவடிக்கைகளை பதிவிட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது .

Advertisement