பாலியல் தொந்தரவு கொடுத்தவர்கள் பெயரை வெளியிட தயார் ! விஜய் பட நடிகை அதிரடி

0
471
- Advertisement -

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்தே போகின்றன. அதற்கு சினிமா நடிகைகள் மட்டும் விதிவிலக்கல்ல. தற்போது பல நடிகைகள் சினிமா துறைகளில் தங்களுக்கு பாலியல் தொல்லைகள் வருவதாக கூறிவருகின்றனர்.

Ileana D'Cruz

தமிழில் கேடி படத்தில் அறிமுகமான நடிகை இலியானா தன்மை காஸ்டிங் கவுச் என்பவர்கள் தம்மிடம் வேலைசெய்பவர்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையளிலும் இருந்த வருகிறது என்று கூறியுள்ளார்.அப்படிபட்ட காஸ்டிங் கவுசாக செயல்பட தம்மையும் சிலர் அழைத்தனர் என்று பொது மேடையில் கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் அஜய் தேவுடன் ரைட் என்ற படத்தில் நடித்துள்ள இலியானா,அந்த படத்திற்கான ப்ரோமோ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய அவர் ஹாலிவுட் போலவே இங்கும் காஸ்டிங் கவுச் பழக்கம் இருப்பதாகவும்.இங்கு நடிகர்களை மட்டும் தான் முடிசூட்டி அழகுப்பார்க்கின்றனர். ஆனால் நான் தென்னிந்திய சினிமாக்களில் நடிக்கும் போது என்னை வெறும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தினர் என்றும் கூறினார்.

illeana

மேலும் ஹாலிவுட்டில் கூட காஸ்டிங் கவுச் பழக்கத்தை எதிர்த்து பல நடிகைகள் குரல் கொடுக்கின்றனர்,ஆனால் இங்கு நான் தனியாக குரல் குடத்தால் மட்டும் போதாது.சென்ற ஆண்டு கூட ரிச்சா சாட்தா காஸ்டிங் கவுச் பழக்கத்தை எதிர்த்து குரல்கொடுத்தார் ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.என்னுடன் சேர்ந்து அனைவரும் குரல் கொடுத்தால் நான் என்னை படுக்கைக்கு அழைத்த அனைத்து நபர்களின் பெயரையும் வெளியிட தயார் என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.இதனால் அவரது பேச்சை கேட்ட சக பார்வையாளர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement