ஒரு பாடலுக்கு இத்தனை லட்சமா ..!ஷாக் கொடுத்த விஜய் பட நடிகை..!

0
74
Vijay

தமிழில் ‘ கேடி’ படத்தில் அறிமுகமான இவர் பின்னர் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு விஜய்யின் ‘நண்பன் ‘ படத்தில் நடித்திருந்தார். பின்னர் இந்த இஞ்சி இடுப்பழகி தமிழி சினிமாவில் எடுபடாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்க்கு நடையை கட்டினார்.

Ileana-Actress

அங்கு கவர்ச்சி புயலாக பல முன்னணி ஹீரோக்களுடன் ஒரு வலம் வந்தார். அதன் பின்னர் இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தார் நடிகை இலியானா.இந்தியிலும் இளம் நடிகர்களுடன் ஒரு சில படங்களில் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

கடைசியாக அஜய் தேவ் கனுடன் ‘ராய்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் தெலுகு நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘அமர் அக்பர் அந்தோனி’ என்ற படத்திலும் நடித்திருந்தார் நடிகை இலியானா.

இந்நிலையில் நடிகை இலியானாவிடம், தெலுகு முன்னணி ஹீரோ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஆட கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு இலியானா 60 லட்சம் சம்பளம் கேட்டுள்ளார். இதனால் தெறித்து ஓடியுள்ள பட குழு தற்போது ராகுல் ப்ரீத் சிங் மற்றும் தமன்னாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம்.