நீண்ட மாதத்திற்கு பின்னர் பொது நிகழ்ச்சிக்கு சென்ற இலியானா…!உருவத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்..!

0
624
lleana

தமிழில் ‘ கேடி’ படத்தில் அறிமுகமான நடிகை இலியானா பின்னர் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு விஜய்யின் ‘நண்பன் ‘ படத்தில் நடித்திருந்தார். பின்னர் இந்த இஞ்சி இடுப்பழகி தமிழி சினிமாவில் எடுபடாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்க்கு நடையை கட்டினார்.

அங்கு கவர்ச்சி புயலாக பல முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரௌண்ட் வந்தார். அதன் பின்னர் இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தார் நடிகை இலியானா.இந்தியிலும் இளம் நடிகர்களுடன் ஒரு சில படங்களில் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்தார்.

இவரது சிறப்பே இவரது ஒல்லியான உடல் அமைப்பு தான் என்றே கூறலாம்கடைசியாக அஜய் தேவ் கனுடன் ‘ராய்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் குறைந்த போதும் தனது வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Ileana

ஆனால்,சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்ததால் தனது காதலருடன் ஜாலியாக ஊர் சுற்றி வந்தார் அம்மணி. இருப்பினும் அவ்வப்போது சில பொது நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்தார்.இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சிக்கு வந்த இலியானாவை கண்டு பலரும் வியந்து போகினர். காரணம் ஒல்லியாக இருந்த அம்மணி தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென மாறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.