கவர்ச்சி நடிகை ஜோதி மீனாவா இது.! இப்படி அடையாளம் தெரியாம மாறிட்டாங்க.! புகைப்படம் இதோ.!

0
117
jyothi-meena
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாகப் புகழ்பெற்றவர், ஜோதி லட்சுமி. அம்மாவைப் போலவே சினிமாவில் கவனம் ஈர்த்தார், மகள் ஜோதி மீனா. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்கப்போகிறார். அம்மாவின் திடீர் மரணம் மற்றும் அவர் நினைவுகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசுகிறார், ஜோதி மீனா.

Actress-jyothi-meena

“அம்மா நடிகை, அப்பா கேமராமேன். ரெண்டு பேரும் சினிமாவில் ரொம்ப பிஸியா இருந்ததால், சின்ன வயசில் பெரும்பாலும் தனிமை உலகத்தில் வளர்ந்தேன். படிப்பின் அவசியத்தை உணரவைக்க ஆளில்லை. படிப்பிலும் நாட்டமில்லை. பத்தாவது முடிச்சதும் டான்ஸில் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன். `உனக்குப் பிடிச்சதை பண்ணு’னு அம்மா ஊக்கப்படுத்தினாங்க. அப்போ, `சிந்துநதி-பூ’ படத்தில் ஹீரோயின் வாய்ப்பு வந்துச்சு.

- Advertisement -

சின்ன வயசிலிருந்தே அம்மா டான்ஸைப் பார்த்து வளர்ந்தேன். அவங்க உடம்பின் ஒவ்வோர் அசைவும் நளினத்தை வெளிப்படுத்தும். அவங்களை மாதிரி நானும் டான்ஸில் புகழ்பெற ஆசைப்பட்டேன். அதனால், ஹீரோயின் வாய்ப்பை மறுத்துட்டேன். `ரகசிய போலீஸ்’ என் முதல் படம். அப்போ 17 வயசுதான். ஒரு கட்டத்தில், கிளாமர் பாட்டுக்கு மட்டும் டான்ஸ் ஆடுற மாதிரி டிராக் மாறிச்சு. என்னைப் பொறுத்தவரை, அதுவும் கேரக்டர்தான்; நடிப்புதான். சில படங்களில் கேரக்டர் ரோலில் நடிச்சேன்.

Actress-jyothi-meena

மீண்டும் நடிக்க முடிவெடுத்திருப்பது பற்றிக் கூறுபவர், “`என் வாழ்க்கைத்தான் கிளாமர் ஆர்டிஸ்டுனு முத்திரை குத்தப்பட்டுருச்சு. நீ ஹீரோயினாவோ, கேரக்டர் ரோல்களிலோ நடிச்சு புகழ்பெறணும்னு ஆசைப்பட்டேன். இப்படிச் சின்ன வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டு, நடிப்பை விட்டுட்டியே’னு பலமுறை அம்மா ஃபீல் பண்ணியிருக்காங்க. அதேநேரம், என் கல்யாண வாழ்க்கை சிறப்பா இருக்கிறதில் சந்தோஷப்பட்டாங்க. அம்மா ஆசையை நிறைவேற்ற முடியலையேனு வருத்தம் உண்டு. அம்மாவின் இழப்பை தாங்கிக்கவே முடியலை.

கவர்மென்ட் டாக்டரான கணவரும், டாக்டருக்குப் படிக்கும் பையனும் காலையில் கிளம்பினால் நைட்டுதான் வருவாங்க. அதுவரை அம்மாவின் நினைவுகளால் வருத்தப்பட்டுட்டே இருந்தேன். அதிலிருந்து விடுபடறதுக்காகவே, 17 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் நடிக்க முடிவெடுத்தேன். இப்போ நான் ஒரு பெரிய பையனின் அம்மா. முன்புபோல டான்ஸ் ஆட முடியாது. சினிமாவோ, சீரியலோ மக்கள் மனசுல நிற்கும் அம்மா, அக்கா கேரக்டர்களில் நடிக்க முடிவெடுத்திருக்கேன். மிஸ் யூ அம்மா. லவ் யூ அம்மா” என நெகிழ்கிறார் ஜோதி மீனா.

Advertisement