நான் எவ்வளவு பெரிய நடிகை..!அவள் வந்தால் நான் வரமாட்டேன்..!அடம்பிடிக்கும் காஜல் அகர்வால்..!

0
250
kajal-agarwal

சினிமா துறையில் நடிகைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சற்று கடினமாக விஷயம் தான். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

Kavacham

பழனி படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார்.பொதுவாக ஆரம்ப காலகட்டத்தில் துளியும் கவர்ச்சியில் ஈடுபடாமல் இருந்த காஜல் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.

தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார். அதுபோக தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிப்பில் கவச்சம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்சாதா மற்றுமொரு கதாநாயகியாக நடித்துள்ளார்.

மெஹ்ரீன் பிர்சாதா
Mehreen Pirzada

இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே காஜலுக்கு மெஹ்ரீன் பிர்சாதாவிற்கு பனிப்போர் நிலவியதாக கூறப்படுகிறது.இதனால்காஜல் பெரிய நடிகை என்ற மமதையில் மெஹ்ரீன் பிர்சாதா இசை வெளியிட்டு விழாவிற்கு வந்தால் நான் வரமாட்டேன் என்று கூறியுள்ளாராம். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு கூட வரவில்லையாம். அதே போல இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்ற போது கூட மெஹ்ரீன் பிர்சாதாவின் காட்சிகள் படமாக்க பட்ட பிறகே காஜல் துபாய்க்கு சென்றதாகவும் டோலிவூட் வட்டாரங்களில் செய்திகள் பரவியது. ஆனால், இதுகுறித்து இருவரிடமும் கேட்டால் வழக்கமாக நடிகைகள் சொலவது போல வி ஆர் குட் ப்ரண்ட்ஸ் என்று சமாளிக்கிறார்களாம் காஜலும், மெஹ்ரீனும்.