இஸ்லாத்தில் சாதிக்கொடுமை இல்லையா? சர்ச்சை ட்வீட் செய்த கஸ்தூரி..!கழுவி ஊற்றும் ட்விட்டர் வாசிகள்..!

0
89
kasturi

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.சமீபத்தில் குழந்தைக்கு பால் கொடுப்பது போல ஒரு அரை நிர்வாண புகைப்படத்தை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது சமீபத்தில் இஸ்லாம் மதத்தை குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டு அனைவரின் கோபத்திற்கும் உள்ளாகியுள்ளார். சமீபத்தில் நடிகை கஸ்தூரி, டிசம்பர் 6 ஆம் தேதி அம்பத்காரின் நினைவு நாள் சுவர் விளம்பரம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில் தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் என்றும் குறிப்பிடபட்டிருந்தது.

இதனை குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி, சாதி இந்து வழக்கம் என்று இந்து மக்களை எதிர்ப்பவர்கள், இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? இஸ்லாத்தில் சாதிக்கொடுமை இல்லை என்றால் இது என்ன? என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ட்விட்டர் வாசிகள், அது தலித் இஸ்லாமியர்கள் இல்லடியம்மா, .தலித்துகளும் இஸ்லாமியர்களும்னு வரும்.. எட்டாம் வகுப்பு இலக்கணத்திலேயே வருதுடியம்மா..தாய்தந்தை, காய்கறி, வெற்றிலைபாக்கு, தாய்சேய்..அப்படின்னு… நீ தமிழ் படிச்சியா இல்லையோ.. என்னவோ போடியம்மா..ஒரு விவரமும் தெரியாமா பதிவு மட்டும் நன்னா போடறே என்று கிண்டலடித்து வருகின்றனர். அதே போல அம்பேத்கார் நினைவு நாளில் தான் பாபர் மசூதியும் இடித்த தினம் என்பதால் அம்பேத்கர் நினைவுநாளையும், பாபர் மசூதி இடிப்பையும் சேர்த்து அப்படி போட்டிருக்கு இதுகூட தெரியலையா என்று கஸ்தூரியை கழுவி ஊற்றி வருகின்றனர்.