கவர்ச்சியில் உங்களை தனியாக பார்க்க வேண்டும்.! ஆபாசமாக பேசிய நபருக்கு கஸ்தூரி பதிலடி

0
169
- Advertisement -

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். அதிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ‘தமிழ் படம் 2’ படத்திலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

Kasthuri

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி ஊழளுக்கு எதிராகவும், அரசியல் மாற்றத்தை வலியுரித்தியும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இடையில் சினிமாவில் இருந்து ஒய் வெடுத்துக் கொண்ட நடிகை கஸ்தூரி பின்னர் சிவா நடித்த ‘தமிழ் படம் 1’ ல் ‘குத்து விளக்கு’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் வாசி ஒருவர் நடிகை கஸ்தூரியை ”நான் உங்களை கவர்ச்சியாக தனிமையில் பார்க்க வேண்டும்” என்று மிக மோசமாக பதிவிட்டிருந்தார். அவரது கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி “தமிழ்ப்படம்2 full show டிக்கெட்ஸையும் நீங்களே வாங்கி, தியேட்டரில் தனியாக அமர்ந்து தனிமையில் பார்க்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக நடிகை கஸ்தூரி மீதான கருத்து தாக்குதல்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக இருந்து வருகிறது. அதே போல சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் நடிகைகள் மீது கூறி வரும் சர்ச்சையான விடயங்களில் உண்மை இருப்பதாக தெரிவித்த நடிகை கஸ்தூரியின் கருத்து சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement