34 வயது நடிகை..! 21வது பிறந்தநாள் என்று பொய் சொன்ன நடிகை..! கிண்டல் செய்த ரசிகர்கள்.?

0
419
Katrina-Kaif
- Advertisement -

நடிகைகள் தங்கள் வயதை மறைத்தோ அல்லது குறைவாக கூறுவதோ வழக்கம் தான். ஆனால் சமீபத்தில் தனது பிறந்தநாள் கொண்டாடியா பாலிவுட்டின் முன்னணி நடிகையான நடிகை கத்ரீனா கைப், இன்ஸ்டாகிராமில் தனது வயதை குறைவாக பதிவிட்டு ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார்.இந்தி சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். 2003 ஆம் ஆண்டு’ பூம் ‘ என்ற இந்தி படத்தில் நடித்து இந்தி சினிமாவில் அறிமுகமான இவர், தனது முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து இந்தி சினிமா ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார்.

அதன் பின்னர் பாலிவுட்டின் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் நடித்த ‘ரேஸ், பாடிகார்ட், தூம் 3’ போன்ற படங்கள் மற்ற மொழி ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. தற்போது 35 வயதாகும் கத்ரீனா தற்போதும் பல இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும், இந்தியில் பிஸியாக நடித்து வரும் இவர் ஷாருகான் நடித்துள்ள ‘ஸிரோ’ படத்திலும் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று (ஜூலை 16) தனது 35 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை கத்ரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “21 வது பிறந்தநாள் இன்று, சரி ஓகே ஒரு சில ஆண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள் ‘ என்று வேடிக்கையாக பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் வயதை குறைத்து கூறிய கத்ரீனாவை கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement