எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் இதை மட்டும் பண்ண மாட்டேன்.! விஜய் பட நடிகை அதிரடி முடிவு.!

0
479
Keerthi
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில் விஜய் , விக்ரம், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் இளையதளபதி விஜயுடன் ‘பைரவா ‘ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யின் 62 வது படமான “சர்கார் ” படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

Actress keerthi suresh

தெலுகு இயக்குனர் நாக் அஷ்வின், மறைந்த பழம்பெரும் நடிகை சவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த “நடிகையர் திலகம்” படத்தில் ஜெமினி கணேசன் தோற்றத்தில் நடிகர் துல்கர் சல்மானும் சாவித்ரி தோற்றத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்திருந்தனர். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷிற்க்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது.

- Advertisement -

தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் கீர்த்தி சுரேஷிற்கு ஏகப்பட்ட இல்லத்தரசிகளின் ரசிகர்கலும் உள்ளனர். இதுவரை படங்களில் கவர்ச்சியாக நடிக்காத கீர்த்தி சுரேஷ் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் அடுத்தடுத்த பட வாய்புகள் இவருக்கு வந்து கொண்டே தான் இருக்கிறது.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ் ” நான் எப்போதும் படங்களில் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன், அது எவ்வளவு பெரிய ஹீரோவின் படமாக இருந்தாலும் முத்தக்காட்சியில் கூட நடிக்கமாட்டேன்” என்று கூறியுள்ளார். தற்போது அரை படத்திற்கு மேல் கையில் வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் ராஜமௌலி படத்திலும் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement