வீட்டு பணிப்பெண்ணை அடித்து வெளியேற்றிய நடிகை..! போலீசில் புகார் கொடுத்த பணிப்பெண்.! சர்ச்சையில் சிக்கிய நடிகை

0
534
Kim-sharma-actress
- Advertisement -

பாலிவுட் பொறுத்தவரை கவர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் என்றுமே பஞ்சம் இருந்தது இல்லை. அந்த வஃயில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை கிம் ஷர்மா தனது வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்ததாக புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கி அனைவரின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார்.

kim
பாலிவுட் நடிகையான கிம் ஷர்மா பல ஆண்டுகளாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் எஸ்தர் என்பவர் காவல் நிலையத்தில் நடிகை கிம் சர்மா மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் “நான் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கிம் சர்மா வீட்டில் வேலைசெய்து வந்தேன். கடந்த மே மாதம் நான் அவரது துணிகளை துவைத்த போது வெள்ளை துணியுடன் கருப்பு ஆடை என்றையும் சேர்த்து துவைத்து விட்டேன்.

இதனை நான் கவனக்குறைவாக செய்து விட்டேன் என்று கிம் சர்மா கூறியபோது, அவர் என்னை தகாத வார்தைகளால் திட்டி வீட்டை விட்டு அடித்து விரட்டிவிட்டார். எனக்கு அவர் சம்பள பாக்கியும் தரவவில்லை.பல முறை நான் என்னுடைய சம்பளத்தை கேட்டும் அவர் கண்டுகொள்ளவில்லை ” என்று குறிப்பிட்டு கடந்த ஜூன் 27 ஆம் தேதி காவல் நிலையத்தில் எஸ்தர் புகார் அளித்துள்ளார்.

- Advertisement -

Actress kim

இதையடுத்து நடிகை கிம் ஷர்மா மீது இந்திய சட்டதின்படி பெண்ணை தாக்கியது, ஒருவரை நோக்கத்துடன் கேவலப்படுத்தியது போன்ற இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை கிம் ஷர்மா தெரிவிக்கையில் “,அவரது சம்பள தொகை வரும் 7 ஆம் தேதி அவருக்கு அளிக்கப்படும். அவரை நான் அடிக்கவில்லை, அவர் என்னுடைய 70 ஆயிரம் மதிப்புள்ள ஆடையை நாசம் செய்தார் அதனால் தான் அவரை வீட்டை விட்டு வெளியே சொல்ல சொன்னேன் ” என்று கூறியுள்ளார்.

Advertisement