என்னுடன் நிஜத்தில் படுக்கையை பகிரலாமே..! நடிகையிடம் கேட்ட நடிகர்..! நடிகை அதிர்ச்சி தகவல்

0
842
Mallika

சினிமாதுறை பொறுத்தவரை கவர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் என்றுமே பஞ்சாமிருந்தது இல்லை. சமீப காலமாக பல நடிகைகள் திரை துறையில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்தும், தங்கள் வாழ்வில் சந்தித்த கசப்பான சம்பவம் குறித்தும் வெளிப்படையாக கூறிவருகின்றனர்.

mallika-sherawats

இந்நிலையில் பாலிவுட்டில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் மல்லிகா ஷ்ராவத் திரை துறையில் ஆரம்ப காலத்தில் அவருக்கு நேர்ந்த ஒரு சங்கடமான சம்பவம் ஒன்றை தெரிவித்துளளார். இந்தி நடிகையான இவர் தமிழில் விஜய் நடித்த “சச்சின்” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர்.

அதன் பின்னர் கமல் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் ஒரு முக்கிய வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் முதன் முதலில் அறிமுகமானது இந்தி திரையுலகில் தான். மேலும், இவர் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான “மர்டர்” என்ற படம் இவருக்கு இந்தியா முழுக்க பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. அதே போல மல்லிகா ஷராவத் இந்தி சினிமாவில் அவ்வளவு எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை.

Mallika-Sherawat

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மல்லிகா ஷராவத் தெரிவிக்கையில் “நான் திரை துறைக்கு நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் ஒரு சில நடிகர்களுடன் படுக்கை அறை காட்சிகளில் நடித்துள்ளேன், அப்போது அவர்கள் என்னிடம், நீ படத்தில் என்னுடன் நெருக்கமாக நடிக்கின்றாய். இதே போல நாம் நிஜத்திலும் இப்படி இருக்கலாமா? என்று கேட்டுள்ளனர். ஆனால், நான் இதுபோன்ற தவறான செயலை ஆதரிக்க கூடாது என்று உறுதியாக இருந்தேன். ” என்று தெரிவித்துளளார்.