நிவேதா பெத்துராஜ் காதலன் யார்..? அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்.!

0
137
- Advertisement -

அட்டகத்தி தினேஷ் நடித்த “ஒரு நாள் கூத்து” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ் .அதன் பின்னர் 2017 இல் வெளியான விஜய் சேதுபதியின் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” என்ற படத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘டிக் டிக் டிக்’ படமும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கும் அம்மணி, விஷ்ணு விஷால், பிரபுதேவா, விஜய் ஆண்டினி போன்றவர்களின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பல்வேறு வெற்று மொழி கதாநாயகிகள் இருக்கும் தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு சில நடிகைகளில் நிவேதா பெத்துராஜும் ஒருவர்.

Nivetha-Pethuraj

மதுரையில் பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ், பிடித்தது எல்லாம் துபாயில் தான். இருப்பினும் தமிழ் கலாச்சாரம் மாறாமல் அளவான கவர்ச்சியில் நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜிடம் அவருடைய காதலரை பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதற்கு அளவான புன்னகையுடன் எனக்கு காதலரெல்லாம் அமையவில்லை என்று பதிலளித்த நடிகை நிவேதா பெத்துராஜ் ‘இந்த கேள்வியை என்னிடம் கேட்டால் எப்படி. இந்தி ஹீரோயின்களிடன் தான் இந்த கேள்வியெல்லாம் கேட்க வேண்டும். அங்கு தான் காதல் கிசு கிசுக்களுக்கு பஞ்சமே இருந்தது இல்லை .எனக்கு காதலர் பற்றி யோசிக்க கூட நேரம் இல்லை’ என்று பதிலளித்துள்ளார்.

Nivetha-Pethuraj

மேலும், நான் துபாயில் கல்லூரியில் படித்திருக்கும் போது பல இளசுகள் எனக்கு ப்ரொபோஸ் செய்துள்ளனர், ஆனால், நான் அவர்களிடம் பேசியது கூட கிடையாது. எனக்கு ப்ரொபோஸ் செய்த்தவர்களளில் ஒருவருடைய போன் நம்பரை மட்டும் நான் வாங்கியுள்ளேன். ஆனால், இன்று வரை போன் செய்ததே இல்லை எப்போதோ அந்த நம்பரை டெலீட் செய்து விட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement