ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்…! கிண்டல் செய்த ரசிகர்கள்

0
204
Priya
- Advertisement -

தமிழ் சீரியல்கள் பல நடிகர் , நடிகைகளுக்கு சினிமாவில் நுழைய ஒரு பாலமாக அமைந்துள்ளது. அதுவும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் பிரபலமான சீரியல்களில் நடித்து விட்டால் அவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் சினிமாவில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

Being happy never goes out of style🤗

A post shared by Priya BhavaniShankar (@actresspriyabshankar) on

விஜய் டிவியில் சீரியல் நடிகையாக இருந்து பின்னர் வைபவ் நடித்த “மேயாத மான்” என்ற படத்தின் மூலம் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். சமீபத்தில் கார்த்திக் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டபட்டு வருகிறது.

- Advertisement -

புதியதலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ” கல்யாணம் முதல் காதல் வரை ” என்ற தொடரில் கிடைத்த பிரபலத்தின் மூலம் இருக்கு பட வாய்ப்பும் தேடி வந்தது. படங்களில் இதுவரை கவர்ச்சியாக நடிக்காத நடிகை பிரியா பவானிஷங்கர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில் நடிகை பிரியா பவானிஷங்கர் ஒளி ஊடுருவும் ஆடை ஒன்றை அணிந்திருந்ததால்,அவரது உடல் பாகங்கள் சற்று வெளியே தெரிந்தது. இதனால் ரசிகர்கள் சிலர் சினிமாவில் சென்றதும் கவர்ச்சியில் ஈடுபட்டு விடீர்களா என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில ரசிகர்களோ பார்ப்பவர்கள் கண்ணில் தான் தவறு இருக்கிறது என்று நடிகை பிரியா பவானிஷங்கருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement