போக்குவரத்து விதியை மீறிய பிக் பாஸ் ரக்ஷிதா, வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்- வைரலாகும் வீடியோ

0
139
- Advertisement -

நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி தன் தோழியுடன் சேர்ந்து காரில் எடுத்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. சமீப காலமாகவே விளம்பரத்திற்காக பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை செல்பி எடுப்பதற்கு விபரீத முயற்சி எல்லாம் மேற்கொண்டு இருக்கிறார்கள். இதில் பல பேருடைய உயிர் போய் இருக்கிறது. குறிப்பாக வாகனத்தில் பயணித்துக் கொண்டே செல்பி, ரீல்ஸ் வீடியோக்கள் எல்லாம் போடுவது அதிகமாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதை போக்குவரத்து துறை கண்டித்தும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மாதிரி வாகனத்தில் பயணித்துக் கொண்டே செல்ஃபி எடுப்பதனால் அவர்கள் மட்டுமில்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படும். இதை தடுக்க சாலை போக்குவரத்து காவல்துறையின் பல்வேறு விதிமுறைகளை விதித்திருக்கிறது. இருந்தாலுமே அதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ரக்ஷிதா கார் ஓட்டும் போது பதிவிட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

- Advertisement -

ரக்ஷிதா வீடியோ:

அதாவது, ரக்ஷிதா, அவர் தோழி பிக் பாஸ் சிவின் இருவரும் காரில் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது சிவின் காரின் சன் ரூப்பில் தலையை நீட்டியபடி செல்ஃபி வீடியோ எல்லாம் எடுத்திருக்கிறார். ரக்ஷிதாவும் காரை ஒட்டியபடியே போஸ் கொடுத்திருந்தார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே, ரக்ஷிதாவை திட்டி வருகிறார்கள். காரணம், காரில் சென்று கொண்டிருக்கும் போது சூரிய ஒளி காருக்குள் வரவேண்டும் என்பதற்காகத்தான் சன் ரூஃப் திறந்து விடுவார்கள்.

நெட்டிசன்கள் கமெண்ட்:

இந்த சன் ரூஃப்பை திறந்து தலையை வெளியே நீட்ட கூடாது என்பது போக்குவரத்து விதிக்கு உட்பட்டது. ஆனால், செல்போன் மீது இருக்கும் மோகத்தால் இளைஞர்கள் பலரும் செல்பி எடுக்கிறார்கள். இவர்களை பார்த்து குழந்தைகளுமே இதை முயற்சி செய்கிறார்கள். இந்த விபரீத முயற்சியினால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. தற்போது ரக்ஷிதா மஹாலக்ஷ்மி தன்னுடைய தோழியுடன் சேர்ந்து இந்த செயலை செய்திருப்பதற்கு நெட்டிசன்கள், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

ரக்ஷிதா குறித்த தகவல்:

சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் இளவரசி, சரவணன் மீனாட்சி, நாச்சியாபுரம், நாம் இருவர் நமக்கு இருவர் 2, இது சொல்ல மறந்த கதை போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். மேலும், இவர் சீரியலில் மட்டுமில்லாமல் சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

ரக்ஷிதா நடிக்கும் படம்:

பின் ரக்ஷிதா ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவரால் டைட்டிலை வெல்ல முடியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் எந்த தொடரிலும் கமிட் ஆகவில்லை. மேலும், தற்போது நடிகை ரக்ஷிதா ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். ஆனால், அந்த படம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Advertisement