ஷகீலா வாழ்கை வரலாறு படத்தில்..ஷகீலாவாக நடிப்பது இந்த நடிகையா..? புகைப்படம் இதோ

0
442
Actress-Richa-chadda
- Advertisement -

சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக நடிகைகளின் வாழ்கை வரலாற்று படங்கள் வெளியாகி இருந்து வருகிறது. இந்தியில் கவர்ச்சி நடிகை சில்க் சுமிதாவின் வாழ்கை வரலாறு ‘ டர்ட்டி பிக்சர்ஸ்’ என்று படமாக்கப்பட்டது. இந்த படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் கவர்ச்சி நாயகியாக வளம் வந்தவர் நடிகை ஷகீலா. தற்போது இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து மலையாள இயக்குனர் ஒருவர் படம் எடுத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ரிச்சா சட்டா என்பவர் நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் நடிகை ஷகீலா, தனது சினிமா மற்றும் சினிமாவுக்கு பின்னால் அனுபவித்த விடயங்களின் தொகுத்து ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் வைத்தே இந்த படத்தை எடுத்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில் ஷகீலாவாக நடித்துள்ள ரிச்சா சட்டா ஷகீலாவாகவே மாறியுள்ளார் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

rich

ஆனால், இந்த படத்திற்கு நடிகை ஷகீலா எதிர்ப்பு தெரிவித்திருந்தால், இதனால் அதிர்ச்சியான நடிகை ரிச்சா சட்டா, ஷகீலாவை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவர் சந்தித்த பின் பேட்டி ஒன்றில் பங்குபெற்ற நடிகை ரிச்சா சட்டா தெரிவிக்கையில்’ நடிகை ஷகீலா, அவருடைய திரைக்கு பின்னல் இருக்கும் வாழ்க்கையை பற்றி கூறியதை கேட்டு தான் மிகுவும் அதிர்ச்சியடைந்தேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement