திருச்செந்தூர் முருகர் கோவிலில் தூய்மை பணியாளர்களிடம் நடிகை ரோஜா நடந்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவில். இந்தக் கோவில் உலக அளவில் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் மக்களின் கூட்டமும் அலைமோதிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பிரபல நடிகையும், அமைச்சருமான ரோஜா அவர்கள் தன்னுடைய கணவருடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அப்போது நடிகை ரோஜாவை சுற்றி மக்கள் செல்ஃபி எடுத்து இருந்தார்கள். அனைவரிடமும் நடிகை ரோஜா செல்பியும் எடுத்திருந்தார். அதன் பின் தூய்மை பணியாளர்கள் சிலர் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு ரோஜா அருகில் சென்றிருந்தார்கள்.
ரோஜா வீடியோ:
உடனே ரோஜா கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் என்று கையில் சைகை செய்திருக்கிறார். இதனால் அவர்களும் சற்று தள்ளிய படியே ரோஜாவுடன் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் ரோஜாவின் செயலை திட்டியும் கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.
நெட்டிசன்கள் கண்டனம்:
மேலும், தூய்மைப் பணியாளர்கள் என்ன தீண்டத்தகாதவர்களாக? ஏன் இப்படி செய்திருக்கிறீர்கள்? ஒரு அமைச்சராக இருந்து நீங்கள் இப்படி எல்லாம் செய்யலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு ரோஜா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தென்னிந்திய திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா.
ரோஜா திரைப்பயணம்:
இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு குச்சி பிடி நடன கலைஞராக தான் இருந்தார். பின் இவர் 1991 ஆம் ஆண்டு ‘பிரேம தப்பாஸு’ என்ற தெலுங்கு ஆண்டு மூலம் தான் நடிகையானார். அதற்கு பின் தான் இவர் தமிழில் ‘செம்பருத்தி’ படத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.
ரோஜா அரசியல்:
அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் ரோஜா அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார். பின் சில ஆண்டு காலாகவே ரோஜா அவர்கள் சினிமாவை விட்டு விலகி அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார்.