தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் ஆர்யா – சயீஷா ஜோடியும் ஒருவர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் ஆர்யா – நடிகை சயிஷாவை திருமணம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது.
தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார்.இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது.
இதையும் பாருங்க : நீங்கெல்லாம் ஆப்போனேட் கூடதா கிளாஷ் விடுவீங்க, ஆனா அவரு அவருக்கே கிளாஷ் உட்டுப்பாரு – vjs மீம்ஸ் தொகுப்பு.
ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா. இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரும் காதலித்த சில மாதத்திலேயே திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக டெடி படத்தில் கூடநடித்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் தன் எந்த ஒரு லேட்டஸ்ட் புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்த சயீஷாஇப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சயீஷா, நீச்சல் குளத்தில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.