42 வயதிலும் பிரபல பத்திரிகைக்கு ஹாட் போஸ் கொடுத்திருக்கும் சிம்ரன்..!

0
229
actress-simran

தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களயும் தனது எடுப்பசையில் வசியம் செய்து வைத்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்ட நடிகை சிம்ரன் தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார்.

Simran

திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயக இருக்கும் நடிகை சிம்ரன் தற்போது துருவ நட்சத்திரம், சீமராஜா, ரஜினி 165 போன்ற படங்களில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் 42 வயதாகும் நடிகை சிம்ரனின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ‘ஜஸ்ட் பார் வுமன்’ என்ற பத்திரிகை அட்டை படத்திற்கு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் மெரூன் நிற ஸ்லீவ் லெஸ் கௌனில் அமர்ந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ள நடிகை சிம்ரன் இந்த வயதிலும் அழகு குறையாமல் அப்படியே உள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. என்னதான் சிம்ரன் இந்த புகைப்படத்தில் அழகாக காட்சியளித்தாலும், திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் இந்த வயதில் இது போன்ற போஸ் தேவையா என்று சிலர் கிண்டலடித்து வருகின்றனர்.