பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சில நாட்களுக்கு ரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டது தெலுங்கு திரையுலகை திடுக்கிட வைத்துள்ளது மேலும் தற்போது ஒரு வாட்ஸ் ஆப் உரையாடலை வெளியிட்டு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளார்.
நடிகை ஸ்ரீ ரெட்டி தமிழில் திமிரு, சாமுராய், கஞ்சிவரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஸ்ரீ ரெட்டி சில தினங்களுக்கு முன்பு ஆந்திரா திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.மேலும் இவர் ஏற்கனவே தன்னை படுக்கைக்கு அழைபத்தவர்களின் பெயர்களை விரைவில் வெளியிடப் போவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்திருந்தார்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சார்ந்த ஒரு சில பிரபலங்கள் தன்னிடம் ஆபாசமாக வாட்ஸ் ஆப்பில் பேசிய உரையாடலையும் அவர்களுக்கு அனுப்பிய புகைப்படங்களையும் ஆதாரத்துடன் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.அதில் முக்கியமாக தெலுகு சினிமாவின் நகைச்சுவை நடிகரான வைவா ஹர்ஷ் என்பவருடன் செய்த வாட்ஸ் ஆப் உரையாடலையும் மற்றும் இந்தியன் ஐடல் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஸ்ரீராம் என்பவருடன் உரையாடிய வாட்ஸ் ஆப் உரையாடலின் பதிவையும் வெளியிட்டுள்ளார்.
#srireddyleaks Look at our Indian idol chat..shame on u sri ram..remove sri ram from ur name..u r not worth to have it pic.twitter.com/V1m5eBUgoT
— Sri Reddy (@MsSriReddy) April 5, 2018
சில ஆண்டுகளுக்கு முன்னர் சுஜி லீக்ஸ் என்று பல நடிகர் நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.தற்போது அதே போன்று நடிகை ஸ்ரீரெட்டி ஏற்கனவே சொன்னது போல இன்னும் எந்தெந்த தெலுகு பிரபலங்களின் இது போன்ற ரகசியங்கள் வெளியாக இருக்கிறதோ என்று தெலுகு சினிமாவே ஆடிப்போய் உள்ளது.