ஸ்ரீதிவ்யாவுக்கு கல்யாணமா..? காதலன் இவரா..? என்ன செய்கிறார் தெரியுமா..? கசிந்த தகவல்..!

0
1625
sRI-DIVYA
- Advertisement -

மாடல் ட்ரெஸிலும் ,கவர்ச்சியான உடைகளிலும் வலம் வந்த நடிகைகள் மத்தியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் அடக்க ஒடுக்கமான தமிழ் பெண்ணாக தாவணியில் வலம் வந்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

sri divya actress

அந்த படத்திற்கு பின்னர் தமிழ்,தெலுங்கு என்று பிஸியாக நடித்து வந்தார். 30 வயதாகும் இவர் பார்ப்பதற்கு இன்னும் பள்ளி பருவ பெண் போல இருப்பதால் இவருக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் மாஸ் ஹீரோக்களுடனும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இளம் ஹீரோக்களுடன் மட்டுமே நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது தமிழ்ல் நடிகர் அதர்வா நடித்து வரும் “ஒத்தைக்கு ஓத்த ” என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அந்த படத்தை தவிர வேறு எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் இவரது பெற்றோரோர்கள் இவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனராம்.

sri divya actress

மேலும் ஸ்ரீ திவ்யாவை திருமணம் செய்துகொள்ள போகும் மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை ஸ்ரீதிவ்யாவின் நீண்ட நாள் பழகிய ஒரு நபர் தானாம். மருத்துவராக அந்த நபரை தான் ஸ்ரீதிவ்யா நீண்ட நாட்களாக காதலித்து வருகிறாராம். இவர்களது திருமணம் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தால் விரைவில் திருமணம் தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இது குறித்த எந்த ஒரு தகவலும் ஸ்ரீதிவ்யா தரப்பில் இருந்து வெளிவரவில்லை.

Advertisement