சேலம் எடப்படியை சேர்ந்தவர் சாப்ட்வேர் இன்ஜினியர் பாலா முருகன். ஜெர்மனியில் சாப்ட்வேர் இன்ஜினீயராக இருந்த இவர் மேட்ரிமோனியில் சைட் மூல தனக்கு பெண் தேடியுள்ளார்.
அப்போது மைதிலி என்ற பெண் இவரது கண்ணில் பட்டுள்ளார். பல அழகான புகைப்படங்களை தன் ப்ரொபலில் பதிவேற்றி வைத்திருந்தார் மைதிலி. கோவையை சேர்ந்த அந்த மைதிலி பாலமுருகனிடம் பேசி பழக ஆரம்பித்துள்ளார். பின்னர், பேஸ்புக்கில் பேசி ஆசை வார்த்தை கூறி பாலமுருகனை மடக்கியுள்ளார் மைதிலி. மேலும், தனது பல அழகான புகைபடங்களை பாலமுருகனுக்கு அனுப்பி காதலிப்பது போல நடித்துள்ளார் மைதிலி.
பின்னர் மைதிலியை பார்க்க கோவை வந்த பாலமுருகனிடம் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி அதனை சரிசெய்ய கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் வரை பணம் கறந்துள்ளார் அந்த ஜித்து ஜில்லாடி மைதிலி.
வேலை முடிந்ததும் தொடர்பை துண்டித்துவிட்டு எஸ்கேப் ஆக நினைத்த, மைதிலி மீது பாலமுருகனுக்கு சந்தேகம் வர துவங்கியது. இதனை புரிந்த மைதிலி பாலமுருகனின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
விசாரித்ததில், மைதிலி என்பவர் ஒரு நடிகை எனவும் அந்த மோசடி பேர்வழியின் உண்மையான பெயர் ஸ்ருதி பட்டேல் எனவும் தெரியவந்துள்ளது. ‘ஆடி போன ஆவணி’, மற்றும் ‘ சோழர் பரம்பரை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் இந்த ஸ்ருதி படேல். நடிகையாக இருந்து இப்படி மோசடி செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்த ஸ்ருதி படேல் தற்போது கைது செயப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரிடம் 40 லட்சமும், கடலூரை சேர்ந்த ஒருவரிடம் 55 லட்சமும் கறந்துள்ளார் இந்த உல்லாச வாழக்கை நாயகி. பல இளைஞர்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி செய்து 1 கோடிக்கு மேல் பணம் சேர்த்துள்ளார். இதனை வைத்து வாடகைக்கு நடிக்க தாய், தந்தை, தம்பி என குடும்பம் செட் செய்து கோவையில் உள்ள பாப்பநாயக்கன் பாளையத்தில் விலை உயர்ந்த அபார்மென்டில் வாடகைக்கு குடி இருந்து வருகிறார்.